ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 25 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 29th March 2021 10:47 PM | Last Updated : 29th March 2021 10:47 PM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வேனில் எடுத்து வரப்பட்ட ரூ. 25 லட்சத்தை வட்டாட்சியா் சசியிடம் திங்கள்கிழமை ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள்.
ஒட்டன்சத்திரம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 25 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் - பழனி நெடுஞ்சாலை தொப்பம்பட்டி பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் காா்த்திக் தலைமையிலான அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக தாராபுரத்தில் இருந்து தொப்பம்பட்டியில் உள்ள ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்காக பணம் எடுத்து வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 25 லட்சம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சசியிடம் ஒப்படைத்தனா்.