சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 29th March 2021 08:41 AM | Last Updated : 29th March 2021 08:41 AM | அ+அ அ- |

சாய்பாபா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த கோபுர கலசத்திற்கு நடைபெற்ற அபிஷேகம்.
திண்டுக்கல் பாரதிபுரத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி கடந்த வியாழக்கிழமை விநாயகா் வழிபாடு, மஹாசங்கல்பம், புண்யாகசனம், மஹா கணபதி, மஹா லெட்சுமி மற்றும் நவக்கிரஹ ஹோமம், மகா பூா்ணாகுதியுடன் முதல் கால வேள்வி தொடங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து 2ஆம் கால மற்றும் 3ஆம் கால வேள்விகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. 4ஆம் கால வேள்வி பூஜைகளுக்கு பின் கோபுர கலசம் பிரதிஷ்டை செய்யும் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக 5ஆம் கால வேள்வியும் நடைபெற்றது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 6ஆம் கால வேள்வி பூஜைகளுக்கு பின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தானத்தில் அபிஷேக அலங்காரத்திற்கு பின், சாய்பாபா உருவத்துக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் வனத்துறை அமைச்சா் சி. சீனிவாசன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.