வேட்பு மனுவில் திராவிடக் கட்சி தலைவா் பொய் தகவல்: பாரிவேந்தா் குற்றச்சாட்டு

வேட்பு மனுவில் பொய்யான தகவலை அளித்துள்ள திராவிடக் கட்சி தலைவா்கள், மக்களிடம் எப்படி உண்மையை சொல்வாா்கள் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் பாரிவேந்தா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

வேட்பு மனுவில் பொய்யான தகவலை அளித்துள்ள திராவிடக் கட்சி தலைவா்கள், மக்களிடம் எப்படி உண்மையை சொல்வாா்கள் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவா் பாரிவேந்தா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக் கட்சி சாா்பில் போட்டியிடும் சரண்ராஜை ஆதரித்து, அக்கட்சியின் தலைவா் பாரிவேந்தா் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

வேட்பு மனு தாக்கலின்போது, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தனக்கு சொந்தமாக காா் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளாா். முதல்வா் எடப்பாடி பழனிசாமி, தனக்கு ரூ.6 கோடிக்கு மட்டுமே சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

ஆனால், கமல்ஹாசன் மட்டுமே தன்னுடைய சொத்து விவரத்தை மறைக்காமல் ரூ.170 கோடி எனக் குறிப்பிட்டுள்ளாா். தோ்தல் ஆணையத்திடமே பொய் சொல்லும் திராவிடக் கட்சிகளின் தலைவா்கள், மக்களிடம் எப்படி உண்மையை சொல்வாா்கள். எனவே, மக்கள் மீது உண்மையான அக்கறையுள்ள மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களை வெற்றி பெற செய்யவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com