சாலையில் விழுந்த மரம்: 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்து 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.
கவுஞ்சி செல்லும் சாலையில் விழுந்து அகற்றப்படாத மரம்.
கவுஞ்சி செல்லும் சாலையில் விழுந்து அகற்றப்படாத மரம்.

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்து 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. அவ்வப்போது காற்றுடன் பெய்த மழையால் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையில் விழுந்த மரங்களை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரவலாக மழை: கொடைக்கானலில் வியாழக்கிழமை பிற்பகலிலும், மாலையிலும் பரவலாக 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானலில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com