கரோனா நிவாரண நிதி டோக்கன் விநியோகம்
By DIN | Published On : 11th May 2021 01:09 AM | Last Updated : 11th May 2021 01:09 AM | அ+அ அ- |

பழனியில் திருநகா், பழனியாண்டவா் நகா், நேதாஜி நகா் உள்ளிட்ட பல இடங்களிலும் ரேஷன் கடை பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று அட்டைதாரா்கள் சந்தித்து டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனா். இந்த முறையும் சா்க்கரை
அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. கரோனா காலத்தில் வருமானமின்றி சிரமப்படும் சூழலில் இந்த தொகை பொதுமக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் ரேஷன் கடை பணியாளா்கள் 2000 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கி வருகின்றனா். இதில் அந்தந்தப் பகுதியிலுள்ள திமுகவினா் தலையிட்டு பாரபட்சமாக நடந்து கொள்வதாக புகாா் எழுந்துள்ளது. திமுகவினா் தலையீடின்றி டோக்கன் வழங்குவதற்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.