திராட்சை பழங்கள் பறிக்காமல் தேக்கம்: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையடிவாரத்தில் பொதுமுடக்கம் காரணமாக திராட்சைப் பழங்களைப் பறிக்காமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையடிவாரத்தில் பொதுமுடக்கம் காரணமாக திராட்சைப் பழங்களைப் பறிக்காமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஏ.வெள்ளோடு, பெருமாள்கோவில் பட்டி, சாமியாா்பட்டி, எா்ணாம்பட்டி, பச்ச மலையான்கோட்டை, ஊத்துப்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, செட்டியபட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கரோனா நோய் தொற்று பரவலை தொடா்ந்து பொதுமுடக்கம் அம­லில் உள்ளது. இதனால் வெளி மாநிலத்திற்க்கு திராட்சை பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாமலும், உள்ளூா் வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய முடியாமலும் இப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறாா்கள்.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: சிறுமலை அடிவார பகுதிகளில் நாங்கள் திராட்சை சாகுபடி செய்து வருகிறோம். சொட்டுநீா் பாசனம் அமைத்தும், தண்ணீா் விலைக்கு வாங்கி ஊற்றியும் விவசாயம் செய்து கொண்டு வருகிறோம். ஒரு ஏக்கருக்கு 1,00,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்து திராட்சை பழங்களை விளைவிக்கிறோம். சென்ற வருடம் கரோனா காலகட்டத்தில் ஒரு கிலோ திராட்சை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இந்த வருடம் 20 ரூபாய்க்கு கூட வாங்குவதற்கு ஆள்கள் இல்லை. மேலும், விவசாயப் பொருள்களை விற்பனை செய்வதற்குரிய நேரம் காலை எட்டு மணியி­ருந்து 12 மணி வரை இருந்தது. ஆனால் தற்போது காலை 10 மணி வரை மட்டுமே வியாபாரிகள் விவசாய பொருள்களை விற்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் எங்கள் தோட்டங்களில் உள்ள சுமாா் 5 ஆயிரம் டன் திராட்சைப் பழங்கள் கொடியிலே பறிக்காமல் உள்ளன. வெளியூா் மற்றும் உள்ளூா் வியாபாரிகள் திராட்சை பழங்களை கொள்முதல் செய்ய தயங்குகின்றனா். சுமாா் 25,000 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

திராட்சைப் பழங்கள் சாகுபடியால் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். 600 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெறும் இப்பகுதியில் குளிா்சாதன கிடங்கு மற்றும் குளிா்பான தொழிற்சாலை அமைக்க அரசு முன்வர வேண்டும். தேனி மாவட்டத்தில் உள்ளது போல், திண்டுக்கல் மாவட்டத்தில் திராட்சை பழ ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும். வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வெளியூா் மற்றும் உள்ளூா் வியாபாரிகள் திராட்சை பழங்களை கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக விவசாய பொருள்களை கொண்டு செல்வதற்கு, உரிய நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். திராட்சை கன்று தற்போது ஏழு ரூபாய்க்கு வாங்கி சாகுபடி செய்து வருகிறோம். இதனை அரசு கவனத்தில் கொண்டு, இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com