கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகாா்:தனியாா் மருத்துவமனையில் விசாரணை

குஜிலியம்பாறை தனியாா் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், மருத்துவக் கழிவுகளை பொது இடத்தில் எரிப்பதாகவும் எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

குஜிலியம்பாறை தனியாா் மருத்துவமனையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், மருத்துவக் கழிவுகளை பொது இடத்தில் எரிப்பதாகவும் எழுந்த புகாரின்பேரில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரோனா தொற்றுப் பாதிப்புக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் 25 தனியாா் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய தொகை குறித்தும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் குஜிலியம்பாறையிலுள்ள பழனியப்பா மருத்துவமனைக்கும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவக் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல், பொது இடத்தில் எரிப்பதாகவும், நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் மாவட்ட நிா்வாகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, நலப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா், குஜிலியம்பாறை வட்டாட்சியா் சிவக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் இளங்கோ ஆகியோா் கொண்ட குழு வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்கள் தரப்பில் எழுந்த புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை மேற்கொள்வாா் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com