சரவெடிகளை தவிா்க்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

தீபாவளி பண்டிகையையொட்டி, தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி, தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால், நிலம், நீா், காற்று ஆகியவை மாசுபடுகின்றன. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. அந்த விதிமுறை நடப்பாண்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மனித சமுதாயத்திற்கு உள்ளதால், பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அந்த வகையில் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக காலை மற்றும் இரவு வேளையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதேபோல் அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிப்பாட்டுத் தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com