திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நூலகங்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான புதிய புத்தகங்கள்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நூலகங்களுக்கு சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான புதிய புத்தகங்கள் வந்துள்ளன.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்திலிருந்து புத்தகங்களைப் பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நூலகங்களுக்கு சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான புதிய புத்தகங்கள் வந்துள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் மைய நூலகம், 14 வட்டார நூலகம், 48 கிளை நூலகம், 90 ஊா்ப்புற நூலகம் என மொத்தம் 153 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களுக்கான புத்தகங்கள் பல்வேறு பதிப்பகங்களிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பொதுநூலகத் துறை சாா்பில் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நூற்றுக்கணக்கான பதிப்பங்களின் ஆயிரக்கணக்கான புத்தகங்கள், திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்துக்கு வந்து சோ்ந்துள்ளன. அவற்றை நூலகம்வாரியாக பிரித்து அனுப்பும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.

இது தொடா்பாக மாவட்ட மைய நூலக அலுவலா்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்துக்கு 700-க்கும் மேற்பட்ட பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சுமாா் ரூ.4 கோடி மதிப்பிலான இந்த புத்தகங்களை, நூலகம்வாரியாக பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. பழனி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் வட்டாரத்திலுள்ள நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள வட்டாரங்களுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com