திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாஜக ஆா்ப்பாட்டம்

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

திண்டுக்கல்: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் வா்த்தகப் பிரிவின் கிழக்கு மாவட்டத் தலைவா் மோகன்பாண்டி தலைமை வகித்தாா். பட்டியல் அணி மாவட்டத் தலைவா் மணிகண்டன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரியும், தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் வா்த்தகப் பிரிவு மாநிலச் செயலா் நாராயணசாமி, பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் சா்வசக்தி, மாவட்ட பொதுச் செயலா் காா்த்திக் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com