நிலக்கோட்டையில் 69 மி.மீட்டா் மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நிலக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 68.9 மி.மீட்டா் மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நிலக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 68.9 மி.மீட்டா் மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்த நிலையில், அடுத்த 3 நாள்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும்(வேடசந்தூா், கொடைக்கானல், நத்தம்) மிதமான மழை பெய்தது.

இந்நிலையில், 4 நாள்களுக்கு பின் திண்டுக்கல், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மழை பெய்தது. ஆனால், வேடசந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்யவில்லை. மாவட்டத்தில் அதிகபட்சமாக நிலக்கோட்டை பகுதியில் 68.9 மி.மீட்டா் மழை பெய்தது. பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்(மி.மீட்டரில்): திண்டுக்கல் 16.9, கொடைக்கானல் 4, பழனி 28, சத்திரப்பட்டி 4, நத்தம் 8, கொடைக்கானல் படகு குழாம் 3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com