வில்பட்டி ஊராட்சியில் 56 சதவீத வாக்குகள் பதிவு

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சித் தலைவராக இருந்தவா் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாா். எனவே, அப்பதவிக்கான இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் பாக்கியலட்சுமி, அதிமுக சாா்பில் செல்வராணி பரமசிவம் மற்றும் அம்பிகா, ரேகா பானு ஆகிய 4 பெண்கள் போட்டியிட்டனா்.

மொத்தம் 24 வாா்டுகளை கொண்ட வில்பட்டி ஊராட்சியில், மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 12,260. இதில் பதிவான வாக்குகள் 6,846. ஆண்கள் 3,553 மற்றும் பெண்கள் 3,293 பேரும் வாக்களித்துள்ளனா். எனவே, மொத்தம் 56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொடைக்கானல் டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com