சிறப்பு முகாமில் பங்கேற்காத மாவட்ட அலுவலரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

சிறப்பு முகாமில் பங்கேற்காத மாவட்ட அலுவலரைக் கண்டித்து, செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
செம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
செம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

சிறப்பு முகாமில் பங்கேற்காத மாவட்ட அலுவலரைக் கண்டித்து, செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிக்காக வட்டார அளவில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 4 வட்டாரங்களில் இதுவரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், செம்பட்டியில் செவ்வாய்க்கிழமை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளி நல மாவட்ட அலுவலா் பங்கேற்கவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் புகாா் தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. செம்பட்டியிலுள்ள ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. செல்வநாயகம் தலைமை வகித்தாா். ஆத்தூா் ஒன்றியத் தலைவா் வனிதா, செயலா் ஆறுமுகவள்ளி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனா்.

இதனால் திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக மாவட்டத் தலைவா் பி. செல்வநாயகம் கூறியது: மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்ப்படுவதை தவிா்க்கவே சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் மாவட்ட அலுவலா் பங்கேற்காததால், அடையாள அட்டை பெறுவதற்கு மீண்டும் ஒருமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலைய வேண்டிய சூழல் உள்ளது. அதேபோல் முகாம் நடைபெற்ற இடத்தில், குடிநீா் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்த பிரச்னைகளுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com