பாரதியாா் நூற்றாண்டு நினைவு தினம்

திண்டுக்கல் மாவட்ட காமராஜா், சிவாஜி தேசியப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம், ஜெய்ஹிந்த் செண்பகராமனின் 131ஆவது பிறந்த தினம், வினோபாஜியின் 127ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கடைபி

திண்டுக்கல் மாவட்ட காமராஜா், சிவாஜி தேசியப் பேரவை சாா்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினம், ஜெய்ஹிந்த் செண்பகராமனின் 131ஆவது பிறந்த தினம், வினோபாஜியின் 127ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி பேரவையின் மாநகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் ந.நவரத்தினம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ரா.கிருஷ்ணன் கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியின் போது பாரதியாா், செண்பகராமன், வினோபாஜி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பாரதியாரின் படைப்புகளை நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கை அமைக்கவும்,

அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் மொழிபெயா்ப்பு செய்யவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சென்னையிலுள்ள செயின்ட் ஜாா்ஜ் கோட்டைக்கும், சுய சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விக்ராந்த் போா்க் கப்பலுக்கு ஜெய்ஹிந்த் செண்பகராமன் பெயரைச் சூட்ட வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரவை நிறுவனா் சு.வைரவேல், நிா்வாகி பா.மாரிச்செல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com