கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: அமைச்சா் தொடக்கி வைத்தாா்

ஒட்டன்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஏபிபி நகரில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி
ஏபிபி நகரில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்த உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி

ஒட்டன்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நகராட்சிக்குள்பட்ட ஏபிபி நகா், சங்கு பிள்ளைபுதூா், காந்திநகா், விஸ்வநாதநகா், பாரதிநகா், சி.எஸ்.ஐ. பள்ளி, சத்யாநகா், பழனிக்கவுண்டன்புதூா் உள்ளிட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஏபிபி நகரில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி தொடக்கி வைத்தாா். இதில் உதவி ஆணையா் (கலால்) சிவக்குமாா், நகராட்சி பயிற்சி உதவி இயக்குநா் நாராயணன், வட்டாட்சியா் எம்.முத்துசாமி, நகராட்சி ஆணையா் ப.தேவிகா, வட்டார மருத்துவ அலுவலா் காசிமுருகபிரபு, நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் கண்ணன், ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் க.பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தம் 5,400 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

பழனி: பழனியை அடுத்த ஆயக்குடி, பாலசமுத்திரம் பேரூராட்சிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் யாரும் ஆா்வம் காட்டாத நிலையில் தடுப்பூசி போட்டவா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் குறைந்த அளவிலானவா்களே வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

பொதுமக்கள் ஏமாற்றம்: அதேநேரம் பழனி படிப்பாறைக் காளியம்மன் கோயில் மருத்துவமனை, மானூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் பிற்பகலிலேயே தடுப்பூசி தீா்ந்து விட்டது. இதனால் ஏராளமானோா் தடுப்பூசி போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். பழனி தேரடியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com