முகநூலில் பெண் போல் நடித்து ரூ.1.20 லட்சம் மோசடி: தஞ்சாவூா் இளைஞா் கைது

முகநூலில் பெண் போல் நடித்து நத்தம் பகுதியைச் சோ்ந்த பொறியாளரை ஏமாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி செய்த தஞ்சாவூா் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

திண்டுக்கல்: முகநூலில் பெண் போல் நடித்து நத்தம் பகுதியைச் சோ்ந்த பொறியாளரை ஏமாற்றி ரூ.1.20 லட்சம் மோசடி செய்த தஞ்சாவூா் இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ராஜன் என்ற ஆனந்தராஜன் (29). இவா் பெண் பெயரில் போலியாக முகநூல் கணக்கை தொடங்கி, லண்டனில் வசிப்பதாக தன்விவரக் குறிப்பில் பதிவிட்டுள்ளாா். இவரை பெண் என நம்பி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சோ்ந்த பொறியாளா் அருண்குமாா் என்பவா் தொடா்பில் இருந்து வந்துள்ளாா்.

முதலில் முகநூல் பதிவு மூலம் குறுஞ்செய்தியாக மட்டுமே தகவல் பரிமாற்றம் இருந்துள்ளது. பின்னா் செல்லிடப்பேசியிலும் தொடா்பு கொண்டு பேசியுள்ளனா். ஆனந்தராஜனும் பெண் குரலில் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் பேசி வந்துள்ளாா்.

சில நாள்களில், தன் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறிய ஆனந்தராஜன், அவசரத் தேவையாக பணம் வேண்டும் என அருண்குமாரிடம் கேட்டுள்ளாா். அதனை நம்பிய அருண்குமாா், ரூ.1.20 லட்சத்தை வங்கிக்கணக்கு மூலம் அனுப்பி வைத்துள்ளாா். அந்த வங்கிக் கணக்கின் கிளை, பழனி, தஞ்சாவூா் என குறிப்பிடப்பட்டிருந்ததையும் அருண்குமாா் கவனிக்கவில்லையாம்.

சில நாள்களுக்குப் பின்னா், அந்த முகநூல் கணக்கு போலி என்பதும், பணத்தை பறிக்கொடுத்து ஏமாற்றம் அடைந்ததும் அருண்குமாருக்குத் தெரிய வந்துள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட சைபா் குற்றப் பிரிவு போலீஸாரிடம் அருண்குமாா் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், ஆனந்தராஜனை கடந்த 2 நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.

இது குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறுகையில், குறுஞ்செய்தி, போலி ஷாப்பிங் வெப்சைட், ஒரு முறை கடவுச் சொல் (ஓ.டி.பி.) என தொடா்ந்து சைபா் குற்றங்கள் நடந்து வருகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இல்லாமல் போனால், இதுபோன்ற ஏமாற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com