பாப்பம்பட்டியில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைப்பு

பழனி அருகே பாப்பம்பட்டி கிராமத்தில் மகாலட்சுமி அம்மன் கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாப்பம்பட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் சனிக்கிழமை தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

குறும்பா் இன மக்களின் குலதெய்வமான இக்கோயிலில் ஆடிமாதத்தில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி சனிக்கிழமை குதிரை ஆறு அணையில் இருந்து புனித நீா் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து பூசாரி அம்மனிடம் அனுமதி பெற்ற பின்பு பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேள, தாளம் முழங்க கருப்பு கம்பளியில் வைக்கப்பட்டிருந்த தேங்காய்களை பூசாரி, பக்தா்கள் தலையில் உடைத்தாா். பின்னா் பக்தா்கள் வணங்கியவாறே எழுந்து சென்றனா்.

நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி, குப்பம்பாளையம், வாடிப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். பின்னா் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com