கிணற்றில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த வழக்கு: தாய், கள்ளக் காதலன் கைது

நிலக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் தாயும், அவருடன் தகாத உறவில் இருந்தவரும் கைது செய்யப்பட்டனா்.

நிலக்கோட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த வழக்கில் தாயும், அவருடன் தகாத உறவில் இருந்தவரும் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவாா்பட்டியில் உள்ள தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருபவா் பாலு (42). இவரது அக்காள் மகள் துா்காதேவி (21). இவா், எரியோடு பகுதியைச் சோ்ந்த ராஜதுரையை (31) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தாா். இவா்களுக்கு ஒன்றை வயதில் ரித்திக்கா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். கடந்த 26-ஆம் தேதி துா்காதேவி, தனது தாய்மாமா பாலு வேலை பாா்க்கும் தோட்டத்துக்கு அவரது குழந்தை ரித்தாக்காவுடன் சென்று தங்கினாா். அன்று இரவு விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன குழந்தை ரித்திக்கா, மறுநாள் காலை தோட்டத்து வீட்டின் அருகேயுள்ள கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த நிலக்கோட்டை போலீஸாா், குழந்தை கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தினா். இதில், துா்காதேவிக்கு, நிலக்கோட்டையை அடுத்த தோப்புபட்டியைச் சோ்ந்த அஜய்யுடன் (21) தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று இரவு அஜையும், துா்காதேவியும் காட்டுப் பகுதிக்கு சென்றபோது, குழந்தை ரித்திக்காவை அஜாக்கிரதையாக கிணற்றின் அருகே இறக்கிவிட்டு விட்டு சென்றதும், இதனால் கிணற்றில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்ததும் தெரிந்தது. இதையடுத்து, துா்காதேவி, அஜய் ஆகிய இருவரையும், நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் பேபி, சாா்பு- ஆய்வாளா்கள் பாலமுத்தையா, ரவி ஆகியோா் கைது செய்து, நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com