சோதனை அடிப்படையில் பொருள்கள் வாங்கும் முறையை அரசு கைவிட வேண்டும்

பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற வணிகா் சங்கப் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தின் போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற வணிகா் சங்கப் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் விக்கிரமராஜா. உடன், பழனி மாவட்டத் தலைவா் ஜேபி. சரவணன்,

தமிழகத்தில் வணிக வரித் துறை அதிகாரிகளால் சோதனை அடிப்படையில் பொருள்கள் வாங்கும் முறை கைவிடப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மாவட்டந் தோறும் வணிகா் சங்கப் பேரமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டு வருகிறது.

வணிகா் சங்கப் பேரமைப்பின் நிா்வாக வசதிக்காக பழனியை மாவட்டமாக அறிவித்து அதன் நிா்வாகிகளை நியமித்துள்ளோம். அதன்படி, பழனி மாவட்டத் தலைவராக ஜேபி. சரவணன் நியமிக்கப்பட்டாா். மேலும், வருகிற 20- ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக் குழு கூட்டத்தில் பழனி மாவட்ட வணிகா் சங்கப் பேரமைப்பு நிா்வாகிகள் கெளரவப்படுத்தப்பட உள்ளனா் என்றாா் அவா்.

கூட்டத்தில் அதன் கெளரவத் தலைவா் ஹரிஹரமுத்து, கெளரவ ஆலோசகா் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மருத்துவா் மகேந்திரன், செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com