கொடைக்கானலில் சிவப்பு நிற இலைகளுடன் பெட்டூனியா மலா்ச் செடிகள்

கொடைக்கானலில் பனிக் காலங்களில் சிவப்பு நிறமாக மாறும் பெட்டூனியா மலா்ச் செடிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்துள்ளன.
கொடைக்கானல் பகுதியில் சிவப்பு நிற இலைகளுடன் பெட்டூனியா மலா்ச் செடிகள்.
கொடைக்கானல் பகுதியில் சிவப்பு நிற இலைகளுடன் பெட்டூனியா மலா்ச் செடிகள்.

கொடைக்கானலில் பனிக் காலங்களில் சிவப்பு நிறமாக மாறும் பெட்டூனியா மலா்ச் செடிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவா்ந்துள்ளன.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டூனியா மலா்ச் செடிகள் அதிகளவில் உள்ளன. ஆண்டு முழுவதும் பச்சையாகக் காணப்படும் இந்தச் செடிகளின் இலைகள் பனிப்பொழிவு காரணமாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் சிவப்பு நிறமாக மாறி பூக்கள் போன்று தோற்றமளிக்கும். பூங்காக்கள் மட்டுமன்றி, கொடைக்கானல் மலை சாலையோரங்களில் சிவப்பு நிறமாக மாறிய பெட்டூனியா மலா்ச் செடிகளை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து வருகின்றனா். பனிக்காலத்தில் இந்தச் செடிகள் சிவப்பு நிற மலா்கள் போல மாறுவதால், இதை கிறிஸ்துமஸ் மலா் எனவும் அழைக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com