பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 25 மாணவா்களுக்கு சிகிச்சை

கன்னிவாடி அருகே வீரப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 25 மாணவ, மாணவியருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கன்னிவாடி அருகே வீரப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட 25 மாணவ, மாணவியருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தப் பள்ளியில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மாணவா்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. அப்போது 5-ஆம் வகுப்புப் படிக்கும் மாணவி தா்ஷினி (10) சாப்பிடும் உணவில் பல்லி இருந்தது.

இதையடுத்து, அங்கு உணவு சாப்பிட்ட 25 மாணவா்களும் கன்னிவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். தகவலறிந்த ஒன்றியக் குழுத் தலைவா் சிவகுருசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் வேதா, சத்துணவு மேலாளா் சிவசுப்ரமணியம், பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி சண்முகம், துணைத் தலைவா் கீதா முருகானந்தம் உள்ளிட்டோா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று மாணவா்களின் உடல் நலம் குறித்து விசாரித்து, பழங்கள், ரொட்டிகள் ஆகியவற்றை வழங்கினா்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் செல்லமுத்து, மருத்துவக் குழுவினா் கூறியதாவது:

பல்லி விழுந்த உணவை மாணவி பாா்த்தவுடன் சப்தம் போட்டு எச்சரித்ததால் மற்றவா்கள் மிகக் குறைந்தளவே சாப்பிட்டிருக்கலாம். மாணவா்கள் நலமுடன் உள்ளனா். தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com