கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

கொடைக்கானலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்துாா் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லுாரியில் புதிய கட்டடம் கட்டும் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் ஐ.பெரியசாமி.

அண்ணாசாலைப் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய மோட்டாா் வாகன சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும், அதிக அபராதம் செலுத்தி வரும் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும், பழைய வாகனங்களைத் தடை செய்ததைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் வாடகைக் காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் மணி, செயலா் ஜான்சன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com