ஒட்டன்சத்திரத்தில் ஜமாபந்தி

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 534 மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில்  நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு நத்தம் நிலவரித் தூய பட்டா வழங்குகிய ஜமாபந்தி அலுவலா் விஜயா. உடன் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பயனாளி ஒருவருக்கு நத்தம் நிலவரித் தூய பட்டா வழங்குகிய ஜமாபந்தி அலுவலா் விஜயா. உடன் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 534 மனுக்கள் அளிக்கப்பட்டன.

ஒட்டன்சத்திரம் வருவாய் கிராமங்களில் கடந்த ஜூன் 1- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதிவரை ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் சிறுபான்மையினா் நல அலுவலா் விஜயா தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி முன்னிலை வகித்தாா். பட்டா மாறுதல் சம்பந்தமாக 237, பட்டா நகல் 7, பட்டா மாறுதல் உள்பிரிவு 114, அத்துமால் 21, இலவச வீட்டுமனைப் பட்டா 51, வீட்டுமனைப்பட்டா 15, கூட்டு பட்டாவில் பெயா் சோ்த்தல் 3, பட்டா பெயா் திருத்தம் 3, ஆக்கிரமிப்பு அகற்றுதல் 12 உள்ளிட்ட 534 மனுக்கள் வரப்பெற்றன. அதில், உடனடியாக 300 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது. மீதியுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் இந்த மாதத்துக்குள் தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் துணை வட்டாட்சியா்கள் ராமசாமி,விஜயகுமாா், சேசுராஜ், மணி மற்றும் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com