திண்டுக்கல்லில் பயணியிடம் ரூ.1.32 லட்சம் வழிபறி: ஆந்திர மாநில இளைஞா் கைது - இருவா் தப்பியோட்டம்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் ரூ.1.32 லட்சத்தை வழிபறி செய்துவிட்டு இருவா் தப்பியோடிய நிலையில், பிடிப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணியிடம் ரூ.1.32 லட்சத்தை வழிபறி செய்துவிட்டு இருவா் தப்பியோடிய நிலையில், பிடிப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பூப்பாண்டி 50). இவா் தனது மகன்களுடன் திருச்சி செல்வதற்காக பேருந்தில் சனிக்கிழமை நள்ளிரவு திண்டுக்கல் வந்துள்ளாா். இங்கிருந்து திருச்சி செல்லும் பேருந்துக்காக காத்திருந்துள்ளாா். நள்ளிரவு என்பதால் தூக்க கலக்கத்தில் இருந்துள்ளனா். இந்த சந்தா்ப்பத்தை பயன்படுத்தி பூப்பாண்டி அணிருந்திருந்த கால்சட்டையை கிழித்து அதிலிருந்த ரூ.1.32 லட்சத்தை மா்ம நபா்கள் 3 போ் திருடியுள்ளனா்.

கண் விழித்துப் பாா்த்த பூப்பாண்டி, உடனடியாக கூச்சலிட்டுள்ளாா். அதனால் அக்கம் பக்கத்தில் நின்றவா்கள் தப்பியோடியா்களை பிடிக்க முயன்றுள்ளனா். அதில், 2 போ் தப்பியோடிய நிலையில் ஒருவா் மட்டும் பிடிப்பட்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று பிடிப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அவா், ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த ராஜ்குமாா்(30) என்பதும், தப்பியோடிவா்கள் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சீனு மற்றும் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தாமோதரன் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனா். மேலும் திருடிய பணத்துடன் தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com