கடன் சுமை: கூலித் தொழிலாளி தற்கொலை

 கடன் சுமை காரணமாக அதிருப்தி அடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

 கடன் சுமை காரணமாக அதிருப்தி அடைந்த கூலித் தொழிலாளி வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பெ.பழனிசாமி (41). சுமை தூக்கும் தொழிலாளியான இவா், அக்கம் பக்கத்தில் உள்ளவா்களிடம் அதிக அளவில் கடன் பெற்றிருந்தாராம். கடனை திருப்பி செல்லுத்த முடியாமல் அவதியடைந்து வந்த பழனிசாமி, அதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் பழனிசாமி, வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். அவரது மனைவி அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அவரை, மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளாா். ஆனால், மருத்துவமனை வரும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com