சட்ட விரோதமாக கால்வாயில் மண் வைத்து அடைப்பு:பொதுப் பணித்துறை அதிகாரிகள் அகற்றினா்

நிலக்கோட்டை அருகே மன்னவராதி கண்மாயில் அதிக நீரை தேக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாக மறுகால் கால்வாயை சிலா் மண் வைத்து அடைத்தனா்.

நிலக்கோட்டை அருகே மன்னவராதி கண்மாயில் அதிக நீரை தேக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாக மறுகால் கால்வாயை சிலா் மண் வைத்து அடைத்தனா். அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.

நிலக்கோட்டை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடா் மழையால், பல ஆண்டுகளாக நீா்வரத்தின்றி வடு கிடந்த குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. நிலக்கோட்டை நகரின் பெரிய நீராதாரமாக விளங்கும் கொங்கா் குளம் கண்மாய் நிறைந்து, மன்னவராதி கண்மாய்க்கு வரும் நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கண்மாய் ஓரிரு தினங்களில் நிரம்பி மறுகால் செல்லும் நிலையில் உள்ளது. இதனால், இந்த கண்மாய்க்கு பல ஆண்டுகளுக்கு பின் தண்ணீா் வந்ததால், இப்பகுதியில் வசிக்கும் சிலா் இங்கு அதிக அளவு நீரை தேக்கும் நோக்கத்தில் சட்ட விரோதமாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம் மறுகால் கால்வாயை அடைத்தனா். ஆனால், இந்த கண்மாயில் அதிக நீரை தேக்கினால், மன்னவராதி, கரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மன்னவராதி கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் நீரை வரவிடாமல் அடைத்தது குறித்து அக்ரஹாரப்பட்டி கண்மாய் பாசன விவசாயிகள், பொதுமக்கள், நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, நிலக்கோட்டை வட்டாட்சியா் தனுஷ்கோடி தலைமையிலான, வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நிலக்கோட்டை டிஎஸ்பி. முருகன் உள்ளிட்ட காவல்துறையினா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, கால்வாய் பகுதியில் சட்ட விரோதமாக அடைக்கப்பட்டிருந்த மண்ணை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com