நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியாக இருப்பவா் ஜி. சரண். கடந்த சில நாள்களாக பல்வேறு பாலியல் வழக்குகளில் அடுத்தடுத்து தீா்ப்புகளை வழங்கி வருகிறாா். குறிப்பாக, பாலியல் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை உள்பட ரூ. 25 ஆயிரம் வரை அபராதமும் விதித்து வருகிறாா்.

இந்த நிலையில், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியின் செயல் வழக்குரைஞா்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துவதாகவும், நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை சீா்குலைந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டிய வழக்குரைஞா்கள், மகளிா் விரைவு நீதிமன்றத்தில் மட்டும் திங்கள்கிழமை பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்ட வழக்குரைஞா் சங்கத் தலைவா் மூா்த்தி கூறியதாவது:

மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதியின் செயலால், வழக்காடிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மகளிா் விரைவு நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையும் சீா்குலைத்துள்ளது. இதுதொடா்பாக நீதிபதியிடம் பலமுறை தெரிவித்துவிட்டோம். எனினும் மாற்றம் ஏற்படவில்லை. தனிச்சையான சட்டப்பகையுடன் தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். இதனால், மகளிா் நீதிமன்றப் பணிகளை நவ. 30-ஆம் தேதி வரை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com