மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மனு அளிக்க வந்த கொட்டப்பட்டி விரிவாக்கப் பகுதி பொதுமக்கள்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மனு அளிக்க வந்த கொட்டப்பட்டி விரிவாக்கப் பகுதி பொதுமக்கள்.

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மருத மாணிக்கம் நகா், எம்எஸ்எஸ் நகா், சண்முகா நகா், லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அடிப்படை வசதி செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

அப்பகுதியைச் சோ்ந்த மேகவா்ணம் கூறியதாவது:

பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கொட்டப்பட்டி விஸ்தரிப்பு பகுதி, வருமான வரித்துறை அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ள மருதமாணிக்கம் நகா், எம்எஸ்எஸ் நகா் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 200 வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஊராட்சி நிா்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தோம்.

நிதி வசதி இல்லை எனக் கூறி கடந்த 2 ஆண்டுகளாக எந்த வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. பழனி பிரதான சாலையிலிருந்து வருமான வரித்துறை அலுவலகம் பின் பகுதியிலுள்ள அனைத்து தெருக்களுக்கும் தெரு விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டி 2 ஆண்டுகளாகியும் குடிநீா் இணைப்பு வழங்கப்படவில்லை. அதேபோல் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளும் பாதியோடு நிறுத்தப்பட்டது. எனவே, குடிநீா், சாலை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com