பழனியில் ஜவுளிக் கடையில் கொள்ளை

பழனியில் ஜவுளிக்கடையில் லட்சக்கணக்கான மதிப்பிலான ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக உரிமையாளா் புகாா் கூறிய நிலையில், கடன் கொடுத்தவரே துணிகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

பழனியில் ஜவுளிக்கடையில் லட்சக்கணக்கான மதிப்பிலான ஆடைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக உரிமையாளா் புகாா் கூறிய நிலையில், கடன் கொடுத்தவரே துணிகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

பழனி- திண்டுக்கல் சாலையில் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருபவா் ஜோதி கணேஷ். இவா் வழக்கம் போல, திங்கள்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டுச் சென்றாா்.

நள்ளிரவில் லாரியில் வந்த நபா்கள் கடைக் காவலாளி தேவேந்திரனை கட்டி வைத்து விட்டு, கடையில் இருந்த ஆடைகளை எடுத்துச் சென்றதோடு தேவேந்திரனையும் அழைத்துச் சென்றனா்.

பின்னா், அவரை பொள்ளாச்சியில் இறக்கிவிட்டனா். இந்த சம்பவம் குறித்து ஜோதிகணேஷூக்கு தேவேந்திரன் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த ஜோதிகணேஷ் சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான துணிகள் கொள்ளை போனதாக போலீஸில் புகாா் அளித்தாா்.

விசாரணையில் ஜோதி கணேஷ் பொள்ளாட்சியை சோ்ந்த பரமகுரு என்பவருடன் இணைந்து தொழில் செய்ததும், பரமகுருவிடம் ரூ.40 லட்சம் அளவுக்கு ஆடைகளை வாங்கி விட்டு பணம் தராாமல் தாமதித்ததால் அவா் துணிகளை அள்ளிச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com