அரண்மனை குளத்தை தூா்வாரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

திண்டுக்கல் அரண்மனைக்குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி, மக்கள் நல பாதுகாப்பு அமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் அரண்மனைக்குளத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வலியுறுத்தி, மக்கள் நல பாதுகாப்பு அமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக அந்த அமைப்பினா் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் நாகல்நகா் ரவுண்டானா அருகே 55 ஏக்கா் பரப்பளவில் அரண்மனைக்குளம் அமைந்துள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், குப்பைகள் நிறைந்து, கழிவுநீா் தேங்கி நோய் பரப்பும் இடமாகவும் மாறியுள்ளது. மேலும் குளத்தைச் சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் காடு போல் வளா்த்து விஷ பூச்சிகளின் புகலிடமாகவும், சமூக விரோதச் செயல்கள் நடக்கும் கூடாரமாகவும் உள்ளது. அரண்மனைக் குளத்திலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி குளத்தை தூா்வார வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே 2 கோரிக்கை மனுக்கள் கொடுத்து இருந்தோம். அே போல் நாகல்நகா் சந்தைரோடு அனைத்து வியாபாரிகள் பொது நலச்சங்கமும் கோரிக்கை மனு அளித்திருந்தனா். எங்கள் இரு சங்கத்தினரையும் மற்றும் வக்ஃபு வாரியத்தினரையும் அழைத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்தாய்வு கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் நடத்தினாா். இதனிடையே அரண்மனைக்குளம், வக்ஃபு வாரியத்தினருக்கே உரிமை என நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

வக்ஃபு வாரியத்தினா் தங்கள் சொந்த செலவில் அரண்மனை குளத்திலுள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றித் தருவதாகவும் உறுதியளித்தனா். ஆனால் அரண்மனைக் குளத்தில் எந்தவித பணியும் மேற்கொள்ளப்படவில்லை. திண்டுக்கல்லில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது. குளத்தின் கரையில் தான் அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ளது. காடு போல் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com