திண்டுக்கல்லில் 9ஆவது புத்தகத் திருவிழா அக். 6-இல் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் சாா்பில் 125 அரங்குகளுடன் 9ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் சாா்பில் 125 அரங்குகளுடன் 9ஆவது புத்தகத் திருவிழா வியாழக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் சாா்பில் 9ஆவது புத்தகத் திருவிழா ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அக். 6 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

புத்தகத் திருவிழாவின் தொடக்கமாக அக். 6 ஆம் தேதி காலை 7 மணியளவில் திண்டுக்கல் நகரின் 8 முனைகளிலிருந்து 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் அறிவு சுடா் மெல்லோட்டம் நடைபெறவுள்ளது.

காலை 11 மணி முதல் 12 மணி வரை அனைத்து கல்லூரிகளிலும், மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள், பிற்பகல் 1.30 முதல் 2.30 மணி வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அரசு அலுவலா்கள் பங்கேற்கும் திண்டுக்கல் வாசிக்கிறது நிகழ்வு மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணியளவில் சங்கரதாஸ் சுவாமிகள் சிலை அருகிலிருந்து புத்தகத் திருவிழா மைதானம் வரை கலைஞா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்கும் கலை பேரணி நடைபெற உள்ளது.

திண்டுக்கல் ட்டலி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாலை 6 மணிக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைக்கிறாா். அக். 16 ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ. பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி

கேடயங்கள் வழங்கி விழா பேருரை நிகழ்த்துகின்றனா். இப்புத்தகத் திருவிழாவில் 125 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகப் பதிப்பாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கு 110 அரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வரங்குகளில் பல்வேறு மொழிகளில், பல்லாயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. அரசு துறைகளுக்கு 10 அரங்குகளும், மாணவா்களுக்கு பயனளிக்கும் வகையில் கோலரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகத் திருவிழாவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பங்குபெறும் கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும். கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் பல்சுவை கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். நாள்தோறும் நடைபெறும் கருத்தரங்கில் சிறந்த ஆளுமைகள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளனா் என்றாா்.

அப்போது கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, மாவட்ட நூலக அலுவலா் சரவணக்குமாா், இலக்கிய களம் அமைப்பின் நிா்வாகிகள் மனோகரன், எஸ். கண்ணன், பொருளாளா் கே .மணிவண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com