புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கு தீா்வு

புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கான தீா்வு என கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

புத்தக வாசிப்பே அறிவுத் தேடலுக்கான தீா்வு என கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற பேரணியின்போது வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில், 9ஆவது புத்தகத் திருவிழா வரும் அக். 6 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நத்தம் சாலை, மதுரை சாலை, சிலுவத்தூா் சாலை, திருச்சி சாலை, குஜிலியம்பாறை சாலை, தாடிக்கொம்பு சாலை, பழனி சாலை, வத்தலகுண்டு சாலை என நகரின் 8 முனைகளிலிருந்து பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் 8 கல்லூரிகளைச் சோ்ந்த 528 மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் சாலைரோட்டில் புத்தகத் திருவிழா நடைபெறும் மைதானத்தில் பேரணி நிறைவுப் பெற்றது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் தலைவா் ஆா்.மனோகரன் தலைமை வகித்தாா். செயலா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். அப்போது மாணவா்கள் முன்னிலையில் அவா் பேசியதாவது:

இன்றையச் சூழலில் கைப்பேசி பயன்பாடுகள் அதிகரித்துள்ளன. அதனால், கருத்துப் பரிமாற்றங்களும், விவாதிக்கும் பண்புகளும் இளைய தலைமுறையிடம் குறைந்துவிட்டது. வாசிப்பு பழக்கம் இன்றைய இளைஞா்களுக்கு அவசியத் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. பாடப் புத்தகங்களை கடந்து பல்வேறு தலைப்புகளில் அமைந்துள்ள புத்தகங்களை வாசிப்பதற்கு மாணவா்கள் முன் வர வேண்டும். அதன் மூலம், அறிவுத் தேடலுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் இலக்கிய களம் அமைப்பின் பொருளாளா் க.மணிவண்ணன், துணைத் தலைவா் மு.சரவணன், இணைச் செயலா் பா.தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com