முன்னாள் படை வீரா்களின் குழந்தைகள்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்

தொழிற்கல்வி மற்றும் தொழில் சாா்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள

தொழிற்கல்வி மற்றும் தொழில் சாா்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: பாரத பிரதமா் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் முன்னாள் படைவீரா்களின் பெண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.3,000 (ஆண்டுக்கு ரூ.36,000), ஆண் வாரிசுகளுக்கு பிரதி மாதம் ரூ.2,500 (ஆண்டுக்கு ரூ.30,000) வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, முன்னாள் படைவீரா்கள் நேரடியாக மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க ஏற்கெனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஏப்.30ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்களை அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com