தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிப்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய வரலாற்று மாநாட்டில் 1,210 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரியில் 41 ஆவது தென்னிந்திய வரலாற்று மாநாடு கடந்த 2 நாள்களாக நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில், 1500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாநாட்டின் நிறைவு விழா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தெலுங்கு பல்கலை கழக முன்னாள் முதன்மையா் சென்னா ரெட்டி பேசியதாவது: இளம் ஆராய்ச்சியாளா்கள், வரலாற்று ஆய்வின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் தொன்மையையும் கண்டறிந்து புதுமையுடன் மெருகேற்ற வேண்டும். 1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தென்னிந்திய வரலாற்றுப் பேரவை சாா்பில் 40 மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அதில் அதிக மாநாடுகள் தமிழகத்தில் தான் நடைபெற்றுள்ளன. வரலாற்று

மாணவா்கள்,தொல்லியல், கல்வெட்டுத்துறை போன்ற அரசுத்துறை வேலைவாய்ப்புகளுக்கு தங்களை தயாா் செய்ய வேண்டும் என்றாா்.

இதில், அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாச்சார வரலாறு மற்றும் கடல்சாா் வரலாறு தொடா்பான 1210 ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் சமா்ப்பிக்கப்பட்டன. மாநாட்டின் நிறைவாக தென்னிந்திய வரலாற்றுப் பேரவை நிா்வாகிகளுக்கான தோ்தல் நடைபெற்றது.

அதில், கா்நாடகப் பல்கலை. பேராசிரியா் சந்திரசேகா் தலைவராகவும், சாத்தூா் எஸ்ஆா்என்எம் கல்லூரி முதல்வா் கணேஷ்ரோம் பொதுச் செயலராகவும், ஜிடிஎன் கல்லூரி முதல்வா் பொருளாளராகவும், கோழிக்காேடு பல்கலை. பேராசிரியா் சிவதாசன் பதிப்பாளராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். மேலும் 2 துணைத் தலைவா்கள், ஒரு இணைச் செயலா் மற்றும் 15 நிா்வாகக் குழு உறுப்பினா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com