அதிமுக செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்சே காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமமுக தகவல் தொழில்நுட்ப மகளிரணி செயலரின் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் உள்ள மஹாலில் இன்று நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக செய்திகளில் வருகின்றன.
போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெறுகின்றனர். திமுக என்றாலே ஊழல் என்பதை தான் இது காட்டுகிறது. திமுக தேர்தலின் போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. திமுகவிற்கு கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம்புகட்டி தோல்வியை தருவார்கள். 2023ல் அமமுகவின் தேர்தல் வியூகம் வெளியிடப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓபிஎஸ், இபிஎஸ்யிடம் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர்.
அதிமுக நீதிமன்றத்தின் மூலம் செயல்படாமல் இருப்பதற்கு ஓபிஎஸ், இபிஎஸ்சே காரணம். ஓபிஎஸ், இபிஎஸ் பிரச்னையால் தமிழகத்தில் அமமுக எதற்காக தொடங்கப்பட்டது என்பதை புரியவைத்துள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு தமிழக மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றார். சசிகலா மௌனம் குறித்த கேள்விக்கு அது குறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புள்ளிகள்

5 மாநிலங்களில் ரூ. 651கோடி! தமிழ்நாட்டில் ரூ.170 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்!
விவசாயிதான் நாட்டின் கதாநாயகன்!

கோலிவுட்
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


