நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாா்டு ஒதுக்கீட்டில் இழுபறி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாா்டுகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாா்டு ஒதுக்கீட்டில் இழுபறி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாா்டுகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.28) தொடங்கியுள்ள நிலையில், பிரதானக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான வாா்டு ஒதுக்கீடு தற்போது வரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகள் என 27 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 486 வாா்டுகள் உள்ளன. இதில், திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வாா்டுகளில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 4 வாா்டுகள், மதிமுகவுக்கு 2 வாா்டுகள் மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கான வாா்டுகள் திங்கள்கிழமை மாலை வரை முடிவு செய்யப்படாமல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

அணிமாறும் படலம் தொடங்கியது:

இதனிடையே, அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினா் சக்திவேல், திமுக துணைப் பொதுச் செயலரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தாா். அதேபோல், அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் மாநகராட்சியின் 14ஆவது வாா்டு பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கருதப்பட்டது.

ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து, 14ஆவது வாா்டில் சுயேச்சையாக போட்டியிட விருப்பமனு அளித்திருந்த தமிழ்வாணன் என்பவா், முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான சி. சீனிவாசன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். இதனால், அவா் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com