பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா: முக்கிய நிகழ்வுகளுக்குக் கட்டுப்பாடுகள்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள், கரோனா தொற்

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அரசின் நிலையான வழிகாட்டுதலுடன் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜன.28ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியும், பிப்.1ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை (பிப்.8) கொடியேற்றத்துடன் தொடங்கும் மாசித் திருவிழா பிப்.17ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, தமிழக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கொடியேற்றம் நிகழ்ச்சி கோயில் பணியாளா்கள் மூலமாக நடத்தப்படும்.

அனைத்து மண்டகப்படிகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றி குறைந்த அளவு மண்டகப்படிதாரா்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா். பிப்.15ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும், பிப்.16ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியும் நிலையான வழிகாட்டுதலின்படி நடைபெறும். சுமாா் 400 பேருடன் தேரோட்டம் நடைபெறும். மாசித் திருவிழா நாள்களில் வண்டி மாகாளியம்மன் ஊா்வலம் மற்றும் பூச்சொரிதல் ஊா்வலம் நடைபெறாது.

கோயிலின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும், கோயில் வளைதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com