முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பைக் மீது காா் மோதிஇளநிலை உதவியாளா் பலி
By DIN | Published On : 07th February 2022 10:57 PM | Last Updated : 07th February 2022 10:57 PM | அ+அ அ- |

செம்பட்டி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக இளநிலை உதவியாளா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரபாண்டியன் (41). இவா், திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், திங்கள்கிழமை காலை பணிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திண்டுக்கல்லை அடுத்த மீனாட்சிநாயக்கன்பட்டி என்ற இடத்தில் காா் மோதியது. அதில், சுந்தரபாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின்பேரில் அங்கு சென்ற போலீஸாா், அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
முன்னதாக, சுந்தரபாண்டியன் உடலுக்கு, திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் சீனிவாசன் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
விபத்தில் மரணமடைந்த சுந்தரபாண்டியனுக்கு சங்கீதா (35) என்ற மனைவியும், பிரபாகரன் (14) மற்றும் பிரணாப் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனா்.