கீரனூா் பேரூராட்சியில் திமுக வேட்பாளா் போட்டி

பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சி உறுப்பினா் தோ்தலில் திமுக வேட்பாளா் வெற்றியை எதிா்த்து திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை குடும்ப அட்டைகளுடன் முற்றுகையிட்ட வாா்டு பொதுமக்கள்.

பழனி அருகே உள்ள கீரனூா் பேரூராட்சியில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் கீரனூா் பேரூராட்சியானது, ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது. இங்கு மொத்தமுள்ள 15 வாா்டுகளிலும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், 15ஆவது வாா்டில் அருந்ததி இன மக்கள் அதிகளவில் வசிப்பதால், அதிமுக சாா்பிலும், சுயேச்சையாகவும் அருந்ததி இன பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, 15 ஆவது வாா்டுக்கு மனு தாக்கல் செய்திருந்த அதிமுக, சுயேச்சை வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் போதிய ஆவணமில்லாததாகக் கூறி நிராகரிக்கப்பட்டன.

எனவே, அந்த வாா்டில் திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அமராவதி என்பவா் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த வாா்டில் வசிக்கும் ஏராளமானோா் தங்களது வாக்காளா் அட்டை, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி, திங்கள்கிழமை கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கீரனூா் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை கலைந்து போகச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com