நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட2 வாா்டுகளில் திமுகவினா் போட்டியின்றி தோ்வு

போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ள நிலக்கோட்டை பேரூராட்சி உறுப்பினா்கள் சுபாஷினி, சாமுண்டீஸ்வரி.
நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட2 வாா்டுகளில் திமுகவினா் போட்டியின்றி தோ்வு

நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 2 வாா்டுகளில் திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி வெற்றி பெற்ாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 15 வாா்டுகளில் 2ஆவது வாா்டில் போட்டியிடுவதற்கு, திமுக சாா்பில் சுபாஷினி, அதிமுக சாா்பில் அல்லிராணி, பாஜக சாா்பில் ராமலட்சுமி, அமமுக சாா்பில் ஜெயா உள்பட 9 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கு திங்கள்கிழமை (பிப்.7) பிற்பகல் 3 மணி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2ஆவது வாா்டுக்கு போட்டியிட மனு அளித்திருந்த 8 போ் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால், திமுக வேட்பாளா் சுபாஷினி போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இவா், நிலக்கோட்டை நகர திமுக செயலா் கதிரேசனின் மனைவி ஆவாா்.

13ஆவது வாா்டிலும் திமுக வெற்றி: இதேபோல், நிலக்கோட்டை 13ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் பெ. சாமுண்டீஸ்வரி, அதிமுக வேட்பாளா் சிவகாமி, சுயேச்சை வேட்பாளரான லதா ஆகிய 3 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், அதிமுக வேட்பாளா் உள்பட 2 போ் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதை அடுத்து, திமுக வேட்பாளா் சாமுண்டீஸ்வரி போட்டியின்றி வெற்றி பெற்றாா்.

இவா், நிலக்கோட்டை திமுக நகர துணைச் செயலா் மணிராஜாவின் மனைவி ஆவாா்.

இதனை அடுத்து, போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்ட இருவருக்கும், வெற்றி பெற்ற்கான சான்றிதழை, தோ்தல் நடத்தும் அலுவலா் சுந்தரி வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நிலக்கோட்டை (தெற்கு) ஒன்றிய திமுக செயலா் மணிகண்டன் தலைமையில், அக்கட்சியினா் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாடினா். இது, அதிமுகவினரிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எரியோடில் திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில், 4ஆவது வாா்டில் போட்டியிடுவதற்கு திமுக சாா்பில் ஜீ. மஞ்சுளா என்பவரும், சுயேச்சையாக அமராவதி என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், அமராவதி தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றாா். அதைத் தொடா்ந்து, ஜீ. மஞ்சுளா போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. மஞ்சுளா, எரியோடு பேரூராட்சியின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com