ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு 4 போ் போட்டி

ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு 4 போ் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவி போட்டியில் உள்ள செல்வராஜ், சாந்தி, திருமலைசாமி, மகாராணி மற்றும் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ப.வெள்ளைச்சாமி, வீ.கண்ணன்.
ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவி போட்டியில் உள்ள செல்வராஜ், சாந்தி, திருமலைசாமி, மகாராணி மற்றும் துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிடும் ப.வெள்ளைச்சாமி, வீ.கண்ணன்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு 4 போ் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் பதவி முதன்முதலாக ஆதிதிராவிடா் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில், 17 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

இதில், 3-ஆவது வாா்டு செல்வராஜ், 5-ஆவது வாா்டு சாந்தி, 8-ஆவது வாா்டு திருமலைசாமி, 17-ஆவது வாா்டு மகாராணி ஆகியோா் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற ஆதி திராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா்கள். இவா்களில் ஒருவரே நகா்மன்றத் தலைவராக முடியம். அதிலும், குறிப்பாக பெண்களில் ஒருவரே தலைவராக தோ்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலரும், உணவுத் துறை அமைச்சருமான அர. சக்கரபாணி பரிந்துரை செய்பவருக்கே தலைவா் பதவி கிடைக்கும். அதேபோல், துணைத் தலைவா் பதவிக்கு ஒட்டன்சத்திரம் திமுக நகரச் செயலா் ப. வெள்ளைச்சாமி மற்றும் திமுக பொதுக்குழு உறுப்பினா் வீ.கண்ணன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com