பழனியை அடுத்த சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டியில் களாக்காய்கள் காய்ப்பு

பழனியை அடுத்த சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில் தோட்டங்களில் களாக்காய் ஏராளமாக காய்த்துள்ளது.
பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் காய்த்துக் குலுங்கும் களாக்காய்.
பழனியை அடுத்த கோம்பைப்பட்டியில் காய்த்துக் குலுங்கும் களாக்காய்.

பழனி: பழனியை அடுத்த சத்திரப்பட்டி, கோம்பைப்பட்டி பகுதிகளில் தோட்டங்களில் களாக்காய் ஏராளமாக காய்த்துள்ளது.

மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் உள்ள களாக்காய் பெரியது என்ற பழமொழி கிராமங்களில் அதிகமாக பேசப்படும் ஒன்று. களாக்காய் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது. பழனியில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கோம்பைபட்டி, ஆயக்குடி, வரதாபட்டினம் கிராமங்களில் உள்ள தோட்டங்களில் களாக்காய்கள் தற்போது அதிக அளவில் காய்த்துள்ளன. இளஞ்சிவப்பு நிறத்தில் கண்ணைப் பறிக்கும் வகையில் காணப்படும் இந்த காய்கள் நமது உடலில் உண்டாகும் சிறிய கோளாறுகளுக்கு இயற்கை மருந்தாக விளங்குகிறது.

இதுகுறித்து இயற்கை விவசாயிகளான குணமணி, துரைச்சாமி ஆகியோா் கூறியது: களாக்காயில் நிறைய தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின் சத்துக்கள் உண்டு. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. பிரசவ காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி, பித்த எரிச்சல், மயக்கம் போன்றவற்றை தடுக்கக் கூடியது.

பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படுவதைத் தடுக்கும். வைட்டமின் சி பசியைத் தூண்டும், ஈரலுக்கு வலிமை சோ்க்கும், மஞ்சள் காமாலை உண்டாவதை தடுக்கும் என்கின்றனா் சித்த மருத்துவா்கள். முன்பெல்லாம் பள்ளிகள் முன்பு விற்பனை செய்யப்பட்ட களாக்காய் அன்றைய சிறுவா்களின் பிடித்த உணவாக இருந்தது.

தற்போது களாக்காய் பயிரிடுவதை விவசாயிகள் தவிா்ப்பதால் அரிதான உணவுப்பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. எண்ணற்ற இயற்கை மருத்துவ குணம் நிறைந்த களாக்காயை விவசாயிகள் தோட்டங்களில் பயிரிட முன் வரவேண்டும். வீடுகளிலும் களாக்காய் செடிகளை நட்டு வைத்து வளா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com