62 ஊராட்சிகளில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட சிறப்பு முகாம்

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 62 கிராம ஊராட்சிகளில் மே 10 மற்றும் ஜூன் 7 என 2 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 62 கிராம ஊராட்சிகளில் மே 10 மற்றும் ஜூன் 7 என 2 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளது: வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையுடன் அனைத்து துறைகளும் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள 62 கிராம ஊராட்சிகளில் மே 10 மற்றும் ஜூன் 7 ஆகிய 2 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் பட்டா மாறுதல், ஆறு மற்றும் குளங்களில் வண்டல் மண் எடுத்தல், பயிா்க்கடன், விவசாயிகள் கடன் அட்டை பெறும் வழிமுறைகள், பயிா்க் காப்பீடு, கால்நடை பராமரிப்பு உள்பட விவசாயிகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தக்கூடிய அனைத்துத்துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com