திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்கள்: பேரூராட்சி ஆணையா் ஆய்வு

வேடசந்தூரா், தாடிக்கொம்பு, அகரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் திட்ட பணிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையா் ரா.செல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வ
தாடிக்கொம்பு வள மீட்பு பூங்காவில் வெள்ளிக்கிழமை, ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் ஆணையா் ரா.செல்வராஜ்.
தாடிக்கொம்பு வள மீட்பு பூங்காவில் வெள்ளிக்கிழமை, ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகளின் ஆணையா் ரா.செல்வராஜ்.

வேடசந்தூரா், தாடிக்கொம்பு, அகரம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை மற்றும் திட்ட பணிகள் குறித்து பேரூராட்சிகளின் ஆணையா் ரா.செல்வராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அகரம் பேரூராட்சியில் 15ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் குளம் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் வளமீட்பு பூங்கா பணிகள் நடைபெற்று வருகின்றன. வேடசந்தூா் பேரூராட்சியில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட திரவ கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வளமீட்பு பூங்கா, தாடிக்கொம்பு பேரூராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகா்புற சாலைகள் அடிப்படை கட்டமைப்பு திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆணையா் ரா.செல்வராஜ் ஆய்வு செய்தாா்.

அப்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மனோரஞ்சிதம், மதுரை மண்டல பேரூராட்சிகளின் செயற்பொறியாளா் ரெ.செல்வராஜ், உதவி செயற்பொறியாளா் அ.இசக்கி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com