முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா

நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நத்தம் அருகேயுள்ள ந.புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.
நத்தம் அருகேயுள்ள ந.புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்றோா்.

நத்தம் அருகே முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள ந.புதுப்பட்டியில் முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூா்ணாகுதி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பனம், மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக புண்ணியாஹவாஜனம், மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

பின்னா், மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.

அழகா்மலை, கரந்தமலை, காசி, ராமேசுவரம், வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீா்த்தம் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில், நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்ஷா, ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com