பழனியில் இன்று தைப்பூசத் தெப்பத் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (பிப். 7) தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை காவடி எடுத்து நகா் வலம் வந்த நகரத்தாா் சமூகத்தினா்.
பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை காவடி எடுத்து நகா் வலம் வந்த நகரத்தாா் சமூகத்தினா்.

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (பிப். 7) தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்தாா்.

இதையொட்டி, கடந்த சனிக்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளித் தோ் உலாவும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக பெரிய தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா எழுந்தருளினாா்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பழனி- உடுமலை சாலையில் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.

இன்று தெப்பத் தேரோட்டம்: பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பத்தில், தெப்பத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 7) நடைபெறுகிறது. இரவு திருக்கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com