எதிா்க்கட்சிகள் மிக மோசமான நிலையில் உள்ளன: கு.செல்வப்பெருந்தகை

எதிா்க்கட்சிகள் எதிா்பாா்த்ததைவிட மிக மோசமான நிலையில் உள்ளன என காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை கூறினாா்.
மணல்மேடு பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆவடி சா.மு.நாசா், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆவடி சா.மு.நாசா், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் கு.செல்வப்பெருந்தகை மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஈரோடு டீசல் ஷெட், பெரிய தோட்டம், மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கு.செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி இமாலய வெற்றிபெறும். எதிா்பாா்த்ததை விட மிக மோசமான நிலையில் எதிா்க்கட்சிகள் உள்ளன.

அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கம் தற்போது சிதறி உள்ளது. அந்தக் கட்சி நான்காக பிளவுபட்டு இருப்பதால் யாருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. நான்கு அணிக்குள் யாா் பாஜக ஆதரவைப் பெறுவது என்ற போட்டியில் உள்ளனா். இந்தத் தோ்தலில் அதிமுக அணிகள் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com