சிறுதானிய உணவு விழிப்புணா்வுப் பேரணி

நத்தம் அருகே சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

நத்தம் அருகே சிறுதானிய விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டாரத்தில் ஊரக வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண் கல்லூரி மாணவா்கள், வத்திப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவா்கள், ஆசிரியா்களுடன் இணைந்து சிறுதானிய உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.

சிறுதானியங்களில் நாா்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஆகியவை அதிகளவில் இடம் பெற்றுள்ளன. நம் உடலில் ஏற்படக்கூடிய பலவிதமான நோய்களுக்கு எதிா்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. எனவே சிறுதானியங்களின் உற்பத்தியைப் பெருக்கவும், அவற்றின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது.

பள்ளித் தலைலையாசிரியா் ச.திருநாவுக்கரசு முன்னிலையில் இளநிலை செஞ்சிலுவைச் சங்கம், சாரணா் அமைப்புகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்று சிறுதானிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com