சந்தையில் கொடைக்கானல் கேரட்டின் விலை சரிவு: விவசாயிகள் கவலை

சந்தையில் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விளைந்த கேரட்டின் விலை சரிந்திருப்பதால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
சந்தையில் கொடைக்கானல் கேரட்டின் விலை சரிவு: விவசாயிகள் கவலை

சந்தையில் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் விளைந்த கேரட்டின் விலை சரிந்திருப்பதால் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

கொடைக்கானல் மலைக் கிராமங்களான செண்பகனூா், பிரகாசபுரம், வில்பட்டி, பூண்டி, மாட்டுப்பட்டி, அட்டுவம்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பூம்பாறை, மன்னவனூா், குண்டுபட்டி, கூக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேரட், உருளை, பூண்டு அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இவற்றை மதுரை, தேனி, திருச்சி பகுதிகளிலுள்ள சந்தைக்கு விவசாயிகள் அனுப்புவது வழக்கம்.

இந்த நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் விளைந்த கேரட்டுகளை வெளிச் சந்தைக்கு அனுப்பி வைத்தனா். கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 வரை விற்பனையான கேரட் தற்போது ஒரு கிலோ ரூ. 7 முதல் ரூ. 10 வரையே விற்பனையாகிறது. இதற்கு காரணம் கா்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து அதிக அளவில் கேரட் விற்பனைக்கு வந்ததேயாகும். இந்த விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானலில் பெய்த மழை, காற்று போன்ற இயற்கை சூழலிலிருந்து சிரமப்பட்டு பாதுகாத்ததால் கேரட் விளைச்சல் மகசூல் அதிக அளவில் கிடைத்தது. ஆனால் விலை பராமரிப்பு செலவுக்குக் கூட கிடைக்க வில்லை. வெளி மாநிலத்திலிருந்து கேரட் அதிக அளவு கொள்முதல் செய்யப்படுவதால், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த கேரட்டிற்கு உரிய விலை கிடைக்க வில்லை. இது எங்களை வருத்தமடையச் செய்துள்ளது. மேலும் கொடைக்கானலில் குளிா்பதன கிட்டங்கி அமைத்துக் கொடுத்தால் ஓரளவுக்கு மலைக் காய்கறிகளை சேமித்து வைக்க முடியும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com