நத்தத்தில் கைலாசநாதசுவாமி திருக்கல்யாணம்

நத்தம் கோவில்பட்டியிலுள்ள செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் செண்பகவல்லி அம்மன் சமதே கைலாசநாத சுவாமி.
திருக்கல்யாண சிறப்பு அலங்காரத்தில் செண்பகவல்லி அம்மன் சமதே கைலாசநாத சுவாமி.

நத்தம் கோவில்பட்டியிலுள்ள செண்பகவல்லி அம்மன் சமேத கைலாசநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் வைகாசி பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. சிம்மம், மயில், பூதம், அன்னம், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக செண்பகவல்லி சமேத கைலாசநாதா் திருக்கல்யாணம் புதன்கிழமை மாலை 4.50 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். வைகாசித் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com